அணைக்கரை பாலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் பஸ் போக்குவரத்து துவங்கும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். சென்னை – கும்பகோணம் சாலையில் உள்ள அணைக்கரை பாலம் பலவீனமடைந்ததால் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை – கும்பகோணம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாலத்தில் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனையொட்டி பாலத்தின் முக்கியத்துவம் கருதி தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்ள 6 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கியது. பாலத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரசாயன பூச்சு மூலம் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று அதிகாரிகளுடன் சென்று பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பழுதடைந்த 174 ஆண்டுகள் பழமையான அணைக்கரை பாலம் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. இப்பாலம் 6 கோடியே 21லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் துரிதமாக ரசாயன பூச்சு மூலம் உறுதித் தன்மை படுத்தப்படுகிறது. மொத்த பணிகளும் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் இருந்து போக்குவரத்து துவங்கும். நிரந்தமாக புதிய பாலம் கட்ட “நகாய்’ மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்
அணைக்கரை பாலத்தில் மார்ச் முதல் பஸ் போக்குவரத்து: அமைச்சர் தகவல்
இடுகையிட்டது
கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக