ரமலான் மாதத்தின் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருத்த அனைவரும் சவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான்பெருநாளை(பண்டிகையாக)கொண்டாடுகிறோம்.
அதிகாலையில் எழுந்து,புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்கி ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தானதர்மத்தை கொடுத்து மகிழ்ச்சி அடைந்து ரமலானின் சிறப்பைபெற்றுள்ளோம்.
போய் வா ரமலானே...! போய் வா!
மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்
மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்
மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே....
மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!
ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடை யோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (சூரா ஆல இம்ரான் 3 : 133)
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு A.முகம்மதுமுஸ்தபா, A.பரகத்துல்லாஹ், A.தீன்முகம்மது அவர்களின் தகப்பனார் S.Aஅப்துல்சலாம் அவர்கள் (04.07.2014) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( (05.07.2014) சனிக்கிழமை நடைப்பெறும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு அஜீதாபீவி அவர்கள் (04.07.2014) வெள்ளிக்கிழமை 12.30 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( 04.07.2014) மாலை நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது