கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாமிய இயக்கங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்திரிகை அறிக்கை: பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு மதசாயம் பூச முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இது போன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப் பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் இந்தக் கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவருவதற்கு முன்பாகவே பா.ஜ.க. பிரமுகர் கொலை என்றாலே அதை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் ஊதி பெரிதாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதையும் அறிய முடிகிறது. அது போன்று இந்தப் படுகொலையையும் நியாய உணர்வோடும் நடுநிலையோடும் அரசும் காவல்துறையும் அணுக வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துத்துவா சக்திகளும் சமூக விரோதிகளும் இணைந்து இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்தக் கொலை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய தமிழக காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என இந்தக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்தப் படுகொலை குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதல்வர் சிறப்புப் புலனாய்விற்கு உத்தரவிட்டதை வரவேற்கின்றோம். மேலும், முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டுத் தலங்களும் வணிக நிறுவனங்களும் அப்பாவி முஸ்லிம்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்தக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

0 கருத்துகள்: