கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இரத்த தானம் செய்வோம்.

அதற்க்கு முன் இரத்தத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமா?

கேஸ் சிலிண்டரை கையாளும் முறைகள்..!!!

* வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் மொத்த எடை 14.2 கிலோ. வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது எடையை சரிபார்த்து வாங்க வேண்டும். சிலிண்டர் எடுத்து வருபவர்களிடம் எடை அளவு இயந்திரங்கள் உள்ளன.
* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.

விடியலை நோக்கியே பயணம்

                                 எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
                                 பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!                                        
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளுமே தனித்தனியே போட்டியிட்டு அவரவர் பங்கிற்கு மக்களிடத்திலிருந்து முடிவுகளையும் பெற்றிருக்கின்றனர்.

ஆதார் அடையாள அட்டை

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்

  பள்ளி மாணவ, மாணவியருக்கு, “ஸ்மார்ட் கார்டு’ வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம்

Liyakath Aliவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,திருத்தம் நீக்கம் சமந்தமாக தேர்தல்
ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அனைவருக்கும் பரப்ப அமீரக காயிதேமில்லத்
பேரவைத் தலைவர் குத்தாலம்.லியாகத்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நபிகளாரின் பொன்மொழிகள்..அமுத மொழிகள்


ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான். என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான். அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை) துன்புறுத்தியவனாவான்.

ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித் ..

ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.

என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,

இஸ்லாமும் உலக அழைப்புப் பணி இயக்கமும்!

                                         டாக்டர் மஹாதீர் முஹம்மது
                                 ———————————————-
இஸ்லாமிய வரலாற்றில் அழைப்புப் பணி என்பது இஸ்லாமிய போதனைகளைப் பரப்ப அதிலும் நம்பிக்கை அற்றவர்கள் மத்தியில் அதிகமான இறைநம்பிக்கையாளர்களைப் பெற ஏற்படுத்தப்பட்டது வெள்ளிடைமலை. இன்று அழைப்புப் பணி குறித்துப் பேசும்போது அது முஸ்லிம்களிடம் இஸ்லாமிய போதனைகளைக் கூறுவது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்றுப் பார்வை

1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.

பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் !

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, ‘அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்’ என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது

மனிதன் காலடித்தடம் பதிக்காத 10 இடங்கள்!! – புகைப்படங்கள்

மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்

"நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை!

நேற்று (19.10.11)மாலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை பெரிய கடைத்தெருவில் சம்பவித்த பெரும் தீ விபத்தில் செருப்புக்கடை ஒன்றும் சில துணிக்கடைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த வருத்தத்துடன் புறமெங்கும் வெப்பமும் அனலும் வாட்டி எடுத்த போதிலும் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து உதவி செய்தது மக்கள் மனங்களைக் குளிர வைத்தது.

குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள்


Childrens
ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? கொஞ்சம் இத படிங்க!

Coffee cupசூடாக காப்பி, டீ குடிப்பவரா? சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”

கண்களை காக்கும் காய்கறிகள்

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.

அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்

1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

சொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை

இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

எஸ்.எம்.எஸ். மூலம் மருந்து விலை!

ருந்து மாத்திரைகள் வாங்கி வாங்கியே அல்லாடித் தவிப்பவர்களுக்கு ஆறுதலான சேதி... டாக்டர் பரிந்துரைத்த மருந்தை எந்த நிறுவனம் குறைந்த விலைக்கு கொடுக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்துகொண்டு, வாங்கும் முறையை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

திட்டமிடாத அணைக்கரை பாலம் சீரமைப்பு பணியால் மக்கள் பாதிப்பு

அதிகாரிகளின் திட்டமிடாத செயலால் பழுதடைந்த அணைக்கரை பாலம் சீரமைப்பு பணி ஜவ்வாக இழுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அவதி தொடர்கிறது.

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

01. துஆக்கள் ஏற்கப்பட
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128)

இலவசமாக M.E /M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Techபடிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த உதவி தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயணம்..

குர்ஆனிய பாடம்: இறைநம்பிக்கையின் பலம்

faith
நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.

மிளகு

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும்
பயமில்லாமல் சாப்பிடலாம்.
கூர்முனையுடைய அகன்ற அழுத்தமான இலையினையும் உருண்டை வடிவப் பழக் கொத்தினையும் உடைய ஏறு கொடி. பழம், கொடி ஆகியவை மருத்துவப் பயனுடையது.

மாவீரன் மருத நாயகம்

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம் !

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்.

  பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


  எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

என் அருமை சமுதாயமே !

என் அருமை சமுதாயமே !
இயக்கங்கள் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் பிரிந்து கிடக்கும் என் அருமை சமுதாயாமே !
உன்னை அழிக்க பள்ளிக்கு வெளியில் ஒரு பெருங்கொண்ட கூட்டம் காத்திருக்கிறது இன்னும் நீ பள்ளிக்குள் என்ன செய்து கொண்டிருக்கிராய் ?

பொறுப்பாளர்கள்

அல்லாஹ்வின் விதி விலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன்.

பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்?

Post image for யஃஜூஜ்,  மஃஜூஜ்,  தஜ்ஜால்? அல்குர்ஆன் வழியில் அறிவியல்S.ஹழரத் அலி, ஜித்தா
    மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.

மழை கற்றுத்தரும் பாடம்

Post image for மழை கற்றுத்தரும் பாடம்உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக….
நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.