கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ள 13 வயது சிறுவன்: போலீஸ் கமிஷனர் பாராட்டு

கோவை:””கணிதம், ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் 13 வயது சிறுவனை, கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ளான்” என, கமிஷனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
 குனியமுத்தூர், பி.கே.புதூரைச் சேர்ந்தவர் காசிப் அகமது; ஸ்டோர்கீப்பர். இவரது மகன் சமீம் காம்ரூன்(13). நிர்மல்மாதா பள்ளியில் படிப்பை துவக்கிய இச்சிறுவன், பிரசன்டேசன் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தான். கணிதம், ஆங்கிலம், பயாலஜி பாடங்களில் மட்டும் மிக்குறைவான மார்க் பெறுவதால், அடிக்கடி ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளானான்.
 ஆனால், கம்ப்யூட்டரில் மகா கெட்டிக்காரனாக இருந்தான். தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, சிறுவனை வரவழைத்து விசாரித்தார். கம்ப்யூட்டரில் சிறந்த திறமை பெற்றிருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தவர், கணபதியில் உள்ள சுகுணா ரிப் பள்ளியில் சேர்த்துவிட உதவினார். பள்ளியில் சேர இரண்டு தேர்வுகளை எழுதியுள்ளான்.
 கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில்,” கணித பாடத்தில் மிகக்குறைந்த மார்க் வாங்கும் இச்சிறுவன், கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ளான். புதிதாக சாப்ட்வேர் உருவாக்கி வருகிறான். கம்ப்யூட்டர் பற்றிய நுணுக்கங்கள் அத்தனையும் தெரிந்து வைத்துள்ளான். ஆனால், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுத்தால், சிறந்த திறமையை வெளிப்படுத்துவான்,’என்றார்.
 சிறுவன் சமீம் அளித்த பேட்டி: எனது அம்மா டீச்சராக உள்ளார். ஒரு தங்கை இருக்கிறாள். 7ம் வகுப்பு படிக்கும் போது, பெரியம்மா கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தார். ஹார்ட் டிஸ்கில் பழுது ஏற்பட்டு விட்டது. பக்கத்து வீட்டில் தங்கி இருந்த இன்ஜி.,கல்லூரி மாணவர்களிடம் கேட்டபோது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக செலவாகும், என்றனர். வேறு வழி தெரியாமல், நானே கம்ப்யூட்டரை பழுது நீக்க முயற்சித்து வெற்றி பெற்றேன். இதன் விளைவாக கம்ப்யூட்டரில் புதுப்புது உத்திகளை கையாள ஆர்வம் ஏற்பட்டது. சாப்ட்வேர்களை உருவாக்கினேன். எக்ஸ்பி 2, எக்ஸ்பி3 யை டெஸ்க்டாப்பில் கொண்டு வந்தேன். தவிர, ஒட்டு மொத்த பைல்கள் அழிந்து போனாலும், அதை மீண்டும் கொண்டு வருவதற்கான சாப்ட்வேர் உருவாக்கி உள்ளேன். பல புதிய சாப்ட்வேர்களை கண்டுபிடிக்கும் ஆர்வம் உள்ளது, என்றான்.
நன்றி: LPTஎக்ஸ்பிரஸ்

0 கருத்துகள்: