கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உடம்பெல்லாம் எரியுதா? சீதாப்பழம் சாப்பிடுங்க - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.


அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது.

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு (திருவாளபுத்துரார்வீடு ) மர்ஹும் அப்துல்ஜப்பார் அவர்களின் மனைவி மஹ்முதாபீவிஅவர்கள் மறைவு

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு (திருவாளபுத்துரார்வீடு )
மர்ஹும் அப்துல்ஜப்பார் அவர்களின் மனைவி மஹ்முதாபீவிஅவர்கள் இன்று
29.04.2011 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்postஇணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

தமிழக பாஸ்போர்ட் அதிகாரியின் வேண்டுகோள்!!

பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

என சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டு!! படிப்போம்!!


ஆச்சரியம் ஆனால் உண்மை!இன்றைய மாணவ மாணவிகளுக்கு ஆச்சிரியத்தை உண்டுப்பன்னும் விதமாக கேரளா மாநிலம் ஆலப்புழ மாவட்டத்தில் முதியவர்களுக்கு நடந்த பரீச்சையில் ஏற்றமும் வயது கூடிய மாணவி
தொண்ணூறு வயதை தாண்டிய பாத்திமா பீவி.

வாழ்க்கையை விழுங்கும் வளைகுடா ,,,,,!!!!?



- இது பிரிக்கப்படாத கடிதம்
வளைகுடாவில் வாழும் சிலபேர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தாலும்,. தாடிவெலுப்பதும் நாடி தளர்வதும் கூட அறியாதவர்களாகவே பலபேர் தனக்குள்ளே உள்ள மாற்றங்களை கூட அறியாதவராகவே வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணியுடன் சக பயணியை அழைத்துச் செல்ல அனுமதி


சென்னை: ஹஜ் பயணம் செல்லும், 70 வயதுக்கு மேற்பட்ட பயணியுடன், சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல, அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று, 70 வயது பூர்த்தியான பயணி, தம்முடன் ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும்.

மிஸ்டுகால் (Missed Call)

பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக்
 கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.

ஒரு சிறிய மிஸ்டுகால் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விசயத்திற்கு நம்மை திசைதிருப்புகின்றோம்.

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?


 



சன்சீவ் பட் - படம் தெஹெல்கா

இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன்.

கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ள 13 வயது சிறுவன்: போலீஸ் கமிஷனர் பாராட்டு

கோவை:””கணிதம், ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் 13 வயது சிறுவனை, கம்ப்யூட்டரில் பிஎச்.டி., திறமை கொண்டுள்ளான்” என, கமிஷனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
 குனியமுத்தூர், பி.கே.புதூரைச் சேர்ந்தவர் காசிப் அகமது; ஸ்டோர்கீப்பர். இவரது மகன் சமீம் காம்ரூன்(13). நிர்மல்மாதா பள்ளியில் படிப்பை துவக்கிய இச்சிறுவன், பிரசன்டேசன் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தான். கணிதம், ஆங்கிலம், பயாலஜி பாடங்களில் மட்டும் மிக்குறைவான மார்க் பெறுவதால், அடிக்கடி ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளானான்.

உங்கள் நோய்க்கு மருந்து தண்ணீரில் உள்ளது முயற்சி செய்யுங்கள்...

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160 ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

கறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்

black money
புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச்
 இது தொடர்பான ஆவணங்களை

டெல்லியில் வக்ஃப்க்கு சொந்தமான இடங்களுக்கு வாடகை 1 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை

கட்டிட வாடகை டெல்லியில் இந்தியாவின் இதர நகரங்களை விட பெருமளவு அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு மாதாந்திர வாடகை வெறும் ஒரு ரூபாய்

என் அன்பான மகனே/மகளே...

பெற்றோர்களை நேசியுங்கள்,
அவர்களை கடைசி காலத்தில்
தனியே விட்டு விடாதீர்கள்.
ஏனெனில்,
''தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.
தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)
ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...
என் அன்பான மகனே/மகளே...
நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.

நபிகளாரின் நற்குணங்கள்

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

பள்ளிக் கல்வி பயிலும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான காலகட்டம் எதுவெனில் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதை தேர்வு செய்வதில்தான் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு சில யோசனைகள் :

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது


ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர். 

செல்ஃபோனும் பயன்படுத்த வேண்டிய முறைகளும்


மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ
நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம்.
 அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும்,

இஸ்லாத்தைப்பற்றி பெரியார்!

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாத்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
முகமதிய மதத்தில் பல கோஷம் இருக்கலாம்,

தண்ணீர் ! தண்ணீர் !!

’மேலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கின்றோமா? நாம் நாடினால் அதனை (குடிக்க முடியாதவாறு) உப்பாகவும் ஆக்கிவிடுவோம். எனவே இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா ?’’ – அல்குர்ஆன் (56: 68,69,70)
  “தண்ணீர் வளம் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ 5639)

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

  அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான்.

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்​களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

5627524803_3b69497e58
புதுடெல்லி:’இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் நீதி…?

criminology-criminal-justice-different_-800X800
சமீப காலமாக இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்தால் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவிற்காக போடப்பட்ட திட்டத்திற்குள் அரசாங்கமும், அதிகாரச் சட்டமும், காவல்துறையும், நீதித் துறையும் மூழ்கிக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாம் பற்றி அறிஞர் அண்ணா


 


source:http://seasonsnidur.blogspot.com/

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்.

ஷாஹினா ஷாபிஃ

மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல்குர்ஆன் 7:26)

பிஞ்சுகள் மனதை வஞ்சிக்கலாமா?

பாத்திமா ஷஹானா கொழும்பு.

குழந்தை செல்வம் என்பது அல்லாஹ் நமக்குத் தந்த பேரருள். குழந்தை செல்வமானது குடும்ப வாழ்க்கைக்கான ஒரு சிறந்த பொக்கிஷம். 

குழந்தைப் பாக்கியத்தின் மூலம் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு வைத்துள்ளான். ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று அக்குழந்தையை இஸ்லாம் காட்டித் தந்த வழியில் வளர்த்து ஆளாக்குவதிலிருந்து ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான். 

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள்

தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

புர்காவிற்கு தடைவிதிக்கும் வேளையில்…

niqab_france
(முஸ்லிம் பெண்கள் தங்களது தலையை மறைக்கும் புர்கா அணிவதை தடைச்செய்து பிரான்சு அரசு நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் உருவான சூழ்நிலைகளை குறித்து ஆராய்கிறார் பி.பி.சியின் ஐரோப்பிய எடிட்டர் கெவின் ஹெவிட்.)
“பாரீஸிலிருந்து நான் இதனை எழுதும் வேளையில் நகரத்தில் தடையை மீறி புர்கா அணிந்த பெண்கள் வெளியேவரும் காட்சிகளை தொலைக்காட்சி  சேனல்கள் ஒளிபரப்பின.

முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கை-2011

2011ஆம் ஆண்டுக்கான தேர்தல் களத்தில் உள்ள பல கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.
இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உழைப்பை ஊக்கப்படுத்தி அதற்கு முறையான ஊதியம் வழங்கப்படும்.

மோடி ஆட்சியில் ஊழல்!! அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு!!

அஹ்மதாபாத்: குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா அம்மாநிலத்தை ஆளும் மோடி அரசுக்கெதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ள காந்தியவாதி அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஊழல் ஆட்சியாளர்களை விசாரணைச் செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

திங்கள், 11 ஏப்ரல், 2011பெரியோர்களே... தாய்மார்களே... ( இது அணைத்து தமிழ் மக்களுக்காகவும்)


பெரியோர்களே... தாய்மார்களே... வாக்காளப் பெருங்குடிமக்களே...

கடந்த இருபது தினங்களுக்கு மேலாக தமிழக மக்கள் அன்றாடம் கேட்டுவந்த

வார்த்தைகள்  (ஏப்ரல்11) பிற்பகலுடன் ஒரு நிறைவுக்கு வந்துள்ளது...

இனி இதுபோன்ற வார்த்தைகளை கேட்க சில ஆண்டுகள் ஆகலாம்...

இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்

ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில்   தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.

பிரான்சில் புர்காவுக்கு தடை இன்று முதல் அமுல்-போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் கைது

பிரான்ஸ் நாட்டில் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியின் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா என அழைக்கப்படும் முகத்தை மறைப்பதை தடைச்செய்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றியது. இச்சட்டம் உலக முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சர்கோஸியின் அரசு இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

கரை சேருமா லோக்பால் மசோதா? - ஒரு அலசல்.

காந்திய வழி போராட்டமே மக்களுக்கு வெற்றியை தேடித்தரும் என்பது இந்திய சுதந்திரத்தின் மூலம் உறுதியானது. பல நாடுகளில் இப்பாதை உதவியது. அதனால்த்தான் காந்தி உலக மக்களளால் மதிக்கப்படுகிறார். எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் காந்திய வழி போராட்டமே எக்காலத்திற்கும் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணி அரசில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், மகாராஷ்டிராவில் ஆதர்ஷ்  வீட்டு வசதி சங்க ஊழல், ராணுவ நில ஊழல், காமன் வெல்த் கேம் ஊழல், கருப்பு பண விவகாரம், இஸ்ரோவின் S-பாண்ட் ஊழல் என தொடர் ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராஜாவை தவிர இந்த ஊழல்களில் தொடர்புடைய எந்த அரசியல்வாதியையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2G வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால்த்தான் வெறு வழியின்றி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள்

பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.

பேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர் : இதெல்லாம் அந்தக் காலம்..

காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். “என்னடா கனகவேல் எப்படியிருக்க…’ எனக் கேட்ட காமராஜர்.
“நல்லா இருக்கேன் தாத்தா… எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு… நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்’ என்றார் அந்த இளைஞர்.

மாவீரன் திப்புசுல்தான்: இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் கட்சி பாகுபாடின்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

புதுவை: நடைபெறபோகும் புதுவை சட்டசபை தேர்தலில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு தகுதி அடிப்படையில் ஆதரவு அளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் முடிவு செய்துள்ளது.
m
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் புதுச்சேரி பஹாருதீன் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் சமுதாயத்திற்கு 6.1 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, இஸ்லாமிய வங்கி, வட்டி இல்லா கடன், அரபி, உருதுமொழி பாடத்திட்டம், பள்ளிவாசல் சொத்துகளைப் பள்ளிவாசல்களே நிர்வகிக்கும் உரிமை கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது.

ஊழலை எதிர்த்து காந்தியவாதி சாகும்வரை உண்ணாவிரதம்!!

புதுடெல்லி: முழுமையான லோக்பால் மசோதா தாக்கல் செய்யக்கோரி சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹஸாரே ஜந்தர் மந்தரில் சாகுவரையிலான உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்.
இதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது. இதனால் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது.
லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.

ஜஹாங்கீர் ஓவியம்: லண்டனில் ரூ.10 கோடிக்கு ஏலம்

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் ஓவியம் லண்டனில் செவ்வாய்க்கிழமை ரூ.10 கோடிக்கு ஏலம் போனது.


17-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் முழு உருவ ஓவியம் லண்டனில் போன்ஹாம்ஸில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது. தங்க சிம்மாசனத்தில் உலக உருண்டையை கையில் ஏந்தியவாறு ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

 புகழ் பெற்ற ஓவியர் அபுல் உசேனால் 1617-ல் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்திய இஸ்லாமிய கலை அமைப்பின் தலைவரான அலிஸ் பெய்லி இந்த ஓவியம் பற்றிக் கூறுகையில், இந்த ஓவியத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடமுடியாது என்று குறிப்பிட்டார். இந்த ஓவியத்துடன் முகலாயர் காலத்திய விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல் ஒன்றும் ஏலம் விடப்பட்டது.

லாஇலாஹ இல்லல்லாஹ்’ கலிமாவின் சிறப்பு

லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவருக்கு இக்கலிமா என்றேனும் ஒரு நாள் நிச்சயம் பலன் அளிக்கும் (ஈடேற்றமளிக்கும்) அதற்கு முன் அவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்க நேர்ந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தபரானீ)
நான் ஒரு கலிமாவை அறிவேன். ஒருவர் தன் மரண வேளையில் அக்கலிமாவைக் கூறினால் அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இக்கலிமாவின் பரக்கத்தால் ரூஹ் (உயிர்) நிம்மதி பெறும். மேலும் கியாமத் நாளில் அக்கலிமா அவருக்கு ஒளியாகிவிடும். (அதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு என்னும் கலிமாவாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மஜ்மஉஸ், ஸவாயித்)
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஒரு முஸ்லிம் தனது அடுத்த சகோதரனுக்கு கண்ணாடியைப் போன்றவன்" என்று கூறினார்கள்.
உண்மையில் இது வெறும் வார்த்தைகளல்ல. அதில் ஊறியிருக்கும் ஆழ்ந்த கருத்துக்களும் தத்துவங்களும் மகத்தானவை. அதன் கருத்தாழத்தை நன்கு புரிந்து கொண்டமையால்தான் அன்றைய ஸஹாபாக்கள் ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தார்கள். இன்றும் திகழ்க்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் கண்ணாடிக்கு உவமிக்கப்பட்டுள்ளான் என்றால் அதனை விளங்க அக்காண்ணாடிக்கிருக்கும் முக்கிய பண்புகளைப்பற்றி சற்று விளங்கிக்கொள்ளவோம். கண்ணாடிக்கு முக்கியமான மூன்று பண்புகள் காணப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண்!

“விடாமுயற்சியுடன் படித்தேன் வென்றேன்!‘ தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம்: என் சொந்த ஊர் கோவை. என் அப்பா, அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். நான் 10ம் வகுப்பில், 78 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2வில், 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றேன். பட்டப்படிப்பை முடித்தபின், எம்.பி.ஏ., படித்தேன். பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன்.அப்போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., பற்றி எந்த கனவும் இல்லை. அப்பாவின் நண்பர், பேராசிரியர் முத்துகுமார், என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க ஆலோசனை கூறினார். அதையடுத்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கும் கனகராஜ் என்பவரிடம் சேர்ந்து படித்தேன்.என் அம்மாவின் எண்ணம், திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான். என் அப்பா, என்னை ஐ.ஏ.எஸ்., படிக்க வைப்பதில் குறியாக இருந்தார். நானும் விடாமுயற்சியுடன் படித்தேன். டில்லி சென்று படித்தால், தேர்வில் எளிதாக ஜெயிக்கலாம் என்று யோசனை கூறினர். இதையடுத்து, நானும், என் தோழிகள் சிலரும், டில்லி சென்று படித்தோம்.ஆனால், அந்த சூழ்நிலை எனக்கு பிடிக்காததால், சென்னை வந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். தினமும், 13 மணி நேரம் படிப்பேன். சீனியர்கள் உதவியதால், “பிரிலிமனரி’ தேர்ச்சி பெற்றேன். விடாமுயற்சியுடன், மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, 169வது இடத்தைப் பிடித்து, ஐ.பி.எஸ்., ஆகிவிட்டேன்.ஜம்மு – காஷ்மீரில் போஸ்டிங் போட்டு விட்டனர். பிரச்னை நிறைந்த பகுதியில் பணி புரிகிறேன் என்ற கவலை, என் குடும்பத்திற்கு உள்ளது. எனவே, மீண்டும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதியுள்ளேன். இதில், வெற்றி பெற்றால், ஊர் பக்கம் வந்து விடுவேன்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையை கடைபிடித்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ்., தான்.
source;http://muthupet.org

முஸ்லிம்கள் வாக்களிப்பது கடமையா?

தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில்
 6 விழுக்காடு என அரசுப் பதிவேடு கூறுகின்றது. அதாவது 6 .5 கோடி மக்கள் தொகையில் 39 லட்சம் பேர் முஸ்லிம்கள்.
         இவர்களில் வாக்குரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டும் 40 சதவீதம். தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.

ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்

[ ''நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9)
 "சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)

அழகில்லை.... இது அழகில்லை!

1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை

2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை
3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை
4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை
5. மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை
6. உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை

7. கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.
8. மாணவர்களுக்கு மறதி அழகில்லை.

9. மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை
10. வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை
11. யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை
12. ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.
13. உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை
14. காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.
15. நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.
16. போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.
17. பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.
18. சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.
19. மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.
20. மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.
source; http://www.nidur.info/

முதுகு வலியும்!! மருத்துவமும்!!

இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.

நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.

சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

கணிணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி

computerஎந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

நல்ல கணவனின் நற்பண்புகள்

'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!''கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

தமிழக மக்கள்தொகை 7.2 கோடி: கணக்கெடுப்பில் தகவல்

2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: தமிழ்நாடு-7,21,38,958, புதுச்சேரி-12,44,464, இமாசலப் பிரதேசம்-68,56,509, ஜம்மு, காஷ்மீர்-1,25,48,926, பஞ்சாப்-2,77,04,236, சண்டீகர்-10,54,686, உத்தரகண்ட்-1,01,16,752, ஹரியாணா-2,53,53,081, தில்லி-1,67,53,235, ராஜஸ்தான்-6,86,21,012, உத்தரப் பிரதேசம்-19,95,81,477, பிகார்-10,38,04,637, சிக்கிம்-6,07,688, அருணாசலப் பிரதேசம்-13,82,611, நாகாலாந்து-19,80,602, மணிப்பூர்-27,21,756, மிசோரம்-10,91,014, திரிபுரா-36,71,032, மேகாலயம்-29,64,077, அசாம்-3,11,69,272, மேற்கு வங்காளம்-9,13,47,736, ஜார்க்கண்ட்-3,29,66,238, ஒரிசா-4,19,47,358, சத்தீஸ்கர்-2,55,40,196, மத்தியப் பிரதேசம்-7,25,97,565, குஜராத்-6,03,83,628, டாமன்-டையூ-2,42,911, தாத்ரா,நாகர் ஹவேலி-3,42,853, மகாராஷ்டிரம்-11,23,72,972, ஆந்திரப் பிரதேசம்-8,46,65,533, கர்நாடகம்-6,11,30,704, கோவா-14,57,723, லட்சத்தீவு-64,429, கேரளம்-3,33,87,677, அந்தமான், நிக்கோபார் தீவுகள்-3,79,944.
thanks:dinamani

இந்திய மக்கள் தொகை 121 கோடி


இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.


உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

பிறருக்கும் உதவலாமே!



1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.



2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.