தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.
குர்ஆன் ஓர் அற்புதம்!
திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத வேதம் இது ஒன்றே என்று சிலர் பாராட்டுகின்றார்கள். குர்ஆனின் ஓசை நயமே ஒரு அற்புதம் என்கின்றனர் சிலர்.
லேபிள்கள்:
இஸ்லாம்
நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!
கொச்சி:நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லேபிள்கள்:
செய்திகள்
மணமகன்: M.முகம்மது இக்பால். மணமகள்:M.நூரா பர்வீன்.
S/O.M.ஜெக்கரியா. D/O.M.முகம்மது ஹஜ்ஜாலி
========================================================================
இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆ மஸ்ஜித்.
நாள் :12.05.2013
========================================================================
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
========================================================================
மணக்கோலம் பூணும் மணமக்களே !
இறையருளாள் ஒன்று சேர்ந்த நீங்கள் இறைவழி நின்று இல்லறத்தை நல்லறமாக்கி ஈருலகப் பேற்றையும் இனிதே பெற வல்லவனை இறஞ்சுகிறோம்.
வான்மறை காட்டும் சீரிய வழிகளையும் உத்தமத் திருநபியின் செயல்முறைகளையும் ஒரு சேர பின் பற்றி இல்வழ்கையை நல்வாழ்க்கையாக்கி வாழ்ந்திட வேண்டுகிறோம். எல்லா நலன்களை இம்மையிலும் - மறுமையில் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறோம்.
ஒன்றுக்குள்ஒன்றாகசேர்ந்தநீவிர்உறவுக்கேஉறவாகிவிளக்கமாகஇன்றைகும்என்றைக்கும் வழிகள் கூறும்இறை மறையின் ஒளியினிலே இயக்கங்கண்டு
பெண்ணுக்கு நல்லாடை ஆணே யென்றபெருமானார் மொழிப்படியே வாழ்ந்து காட்டிஇன்பத்தைப் பொழிகின்ற மழலையோடுஎழில் வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்துகிறோம்.
என்றும் அன்புடன்....பல்லாண்டு வாழ வாழ்த்தும.
A.தாஜுத்தீன் (துபாய்) மற்றும்குடும்பத்தார்கள்.
R.B.M.முகம்மதுபாருக் (துபாய்) மற்றும்குடும்பத்தார்கள்.
M.ஜெகபர்அலி (தமாம்) மற்றும்குடும்பத்தார்கள்.
A.முஹம்மது பாக்கர் (கத்தார்) மற்றும்குடும்பத்தார்கள்.
லேபிள்கள்:
திருமண வாழத்து
உங்கள் தேர்வு! (கோபம்)
(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் 3:134)
பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம்.
லேபிள்கள்:
கட்டுரைகள்
"ஆதார்' அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891
சென்னை:வரும்அக்டோபருக்குள், ஆதார் அட்டை வாங்காதவர்கள், சமையல் எரிவாயு உருளையை, மானியம் இல்லாமல், இரு மடங்கு விலை கொடுத்து வாங்க நேரிடும்.பயனாளிகள்நாடு முழுவதும், பொதுமக்களுக்கு உயிரி தொழில்நுட்பத்திலான ஆதார் அடையாள அட்டை, வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு "உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வழங்க உள்ளது.
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
பிளஸ்–2தேர்வு முடிவை தெரிந்துகொள்ள 4 அரசு இணையதள முகவரிகள் அரசு அறிவிப்பு
பிளஸ்–2 தேர்வு முடிவு 9–ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்று முடிவுகளை தெரிந்துகொள்ள அரசு இணையதள முகவரிகள் 4 அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள். தேர்வு முடிவு 9–ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவு 4 அரசு இணையதள முகவரிகளில் வெளியிடப்படுகிறது. அது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்கள்
இ.யூ.முஸ்லிம்லீக் சார்பில் சிறைவாசிகளுக்கு நிதி உதவி!
மரக்காணம் சாதிக் கலவரங்களில் நிதா னத்தை கைபிடித்த தமி ழக காவல் துறை மேலப் பாளையம் முஸ்லிம்களை கைது செய்ய அவசரம் காட்டியது ஏன்? என நெல்லை செய்தியாளர் கள் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர்பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேள்வி எழுப்பினார்.
திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத் தில் தன்னை சந்தித்து முறையிட்ட கிச்சான் புஹாரி, பீர் முகைதீன், பஷீர் மற்றும் சாலின் குடும்பங்களுக்கு மனிதா பிமான அடிப்படையில் ரூ.40 ஆயிரம் வழங்குவ தாக அறிவித்தார்.
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
மாதுளையின் மருத்துவ குணங்கள்.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.
லேபிள்கள்:
ஆரோக்கியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)